ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
காபூல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் அதிபர் மாளிகையின் அருகே, ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்கு உள்ளது. கிடங்கை சுற்றிலும் ராணுவ உயரதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இந்த நிலையில், இப்பகுதியில் வெடிப்பொருட்களால் நிரப்பப்பட்ட காரை வெடிக்க வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.