சார்ஜா மன்னரின் மகன் லண்டனில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜா மன்னரின் மகன் லண்டனில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவை சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008-ம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதன் பிரதான கடை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சோஹோவில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், சார்ஜா ராயல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி நேற்று முன்தினம் லண்டனில் உயிரிழந்தார். சார்ஜா ஆட்சியரின் மகன் மறைவை தொடர்ந்து, ஜக்கிய அரபு அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
நாட்டில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரின் உடல் இன்று அமீரகம் கொண்டு வரப்படும். பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தி உடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.