நைஜீரியாவில் பயங்கர விபத்து !! பெட்ரோல் லாரி வெடித்து சிதறியதில் 50 பேர் பலி !!

By Selvanayagam PFirst Published Jul 2, 2019, 8:33 PM IST
Highlights

நைஜீரியாவின் டென்யூ மாகாணத்தில் பெட்ரோல் லாரி ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள டென்யூ மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. 

இதில் லாரியில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெட்ரோலை பாத்திரத்தில் சேகரிக்க அங்கு குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70 பேர் படுகாயமடைந்தனர்.

லாரியிலிருந்து பெட்ரோல் கொட்டியதுமே மக்கள் சேகரிக்க ஓடியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்குவந்த அதிகாரிகள் இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அதனை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள்  கவனம் முழுவதும் பெட்ரோலை சேகரிப்பதிலேயே இருந்தது.
 
இறுதியில் லாரி வெடித்ததில் சிக்கி  50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். நைஜீரியாவில் இதுபோன்ற விபத்துக்களில் மக்கள் பெட்ரோல் சேகரிக்க சென்று சிக்குவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
 
இதற்கு முன் பல முறை டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்களான போதும், அங்குள்ள மக்கள் திரும் திரும்ப இது போன்ற விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்

click me!