கிரிப்டோ கரன்சி மூலம் கோடீஸ்வரரான நபர்.. திடீரென மாயம் - ஒரு வாரம் கழித்து துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல்!

By Ansgar R  |  First Published Jul 28, 2023, 5:04 PM IST

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டின் மூலம் பல கோடிகளை குவித்த ஒருவர் ஆவர்.


இன்று பலர் கிரிப்டோ கரன்சி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு பெர்னாண்டோ திடீரென மாயமானார்.

இந்நிலையில் ஒருவார காலமாக காணாமல் போயிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை அவர் கோரமான முறையியல் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் அளித்த தகவலின்படி, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீரோடைக்கு அருகில் ஒரு சூட்கேஸில் பெர்னாண்டோவின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள், அங்கு கிடந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸை திறந்து பார்த்தபோது அந்த அதிர்ச்சியான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெர்னாண்டோ கடந்த ஜூலை 19 முதல் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது, அந்த பெட்டிக்குள் பெர்னாண்டோவின் கால்கள் மற்றும் கைகள் இருந்த நிலையில், அவரது மற்றொரு கை ஓடையின் வேறு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

நடுக்கடலில் தீப்பற்றிய சரக்குக் கப்பல்! நெருப்பில் நாசமாகும் 3000 சொகுசு கார்கள்!

இரு நாட்கள் கழித்து போலீசார், கடந்த புதன்கிழமை அன்று பெர்னாண்டோவின் தலை மற்றும் உடற்பகுதியை கண்டுபிடித்துள்ளனர். உடல்கள் வெட்டப்பத்திருப்பதை வைத்து, இது கைதேர்ந்த ஒருவரால் தான் வெட்டப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெர்னாண்டோவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அதில் அவர் உடல் வெட்டப்படுவதற்கு முன்பு, அவர் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, கடந்த ஜூலை 19 அன்று அந்த இடத்தை காலிசெய்வதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினம் வெகுநேரமாகியும் அவர் வீட்டின் சாவியை கொடுக்க வரவில்லை என்பதால், அந்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

என் மகளை விரும்பவில்லை என்றால் புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்பக் கொடு; திருமணத்தில் கதறி அழுத தந்தை!!

click me!