இது Global Boiling Era.. எச்சரிக்கும் ஐ.நா தலைவர்.. 1.2 லட்சம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட Hottest ஜூலை இது!

By Ansgar R  |  First Published Jul 27, 2023, 9:42 PM IST

புவி வெப்பமயமாகும் காலம் முடிந்து தற்போது அது கொதிக்கும் காலகட்டம் வந்துவிட்டது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.


விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, இந்த 2023ம் ஆண்டின் ஜூலை மாதம், உலகின் மிக மிக வெப்பமான மாதமாக பதிவாகும் என்று உறுதியாக கூறியுள்ளனர். 

"காலநிலை மாற்றம் ஏற்படுகிறது, இது மிகவும் பயங்கரமானது என்று கூறியுள்ளார் அன்டோனியோ. மேலும் இது வெறும் ஆரம்பம் தான் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அரசியல்வாதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளார். "காற்று சுவாசிக்க முடியாத அளவில் மாசுபாடு வருகின்றது, வெப்பம் தாங்க முடியாதது அளவை எட்டிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறுகின்றனர்.

Tap to resize

Latest Videos

"உலக வெப்பநிலை உயர்வை 1.5C ஆகக் கட்டுப்படுத்துவது மற்றும் மிக மோசமான காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது என்பது சாத்தியமானது தான். ஆனால் அதற்கான வழிவகைகளை நாம் உடனடியாக செயல்படுத்தவேண்டும். கப்பல் போக்குவரத்தின் மூலம் ஏற்படும் மாசுபாடு, கணிசமான அளவில் குறைத்து வருவது நம்பிக்கை தந்தாலும், அவை புவி கொதிப்படையும் வேகத்திற்கு ஈடு கொடுப்பதில்லை என்றும் விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மணிப்பூர் வீடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

WMO செயலாளர் நாயகம் பெட்டேரி தலாஸ் பேசுகையில், கிறீன் ஹவுஸ் வாயு எனப்படும் வளிமண்டலத்தில் வெப்பத்தை அடைக்கும் வாயுக்களின் பயன்பாட்டை நாம் உடனடியாக பெரிய அளவில் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். கிரீன்ஹவுஸ் வாயு மாசுபாடு, இந்த மாதத்தில் மட்டும் மூன்று கண்டங்களில் கொடிய வெப்ப அலைகளை ஏற்படுத்தி வெப்பநிலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத் தலைவர்கள் பலர் வருகின்ற நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கூடி பேசவுள்ளார்கள். அதில் நமது கிரகம் மேற்கொண்டு வெப்பமடைவதை நிறுத்தவும், அதற்கு உண்டான வழிகளை ஆராய்வது குறித்தும் விவாதிக்கப்படும். 

புவி வெப்பமடைவதை தாண்டி தற்போது அது கொதிநிலைக்கு செல்ல பல காரணிகள் உள்ளது, அதில் முக்கியமான ஒன்று தான் Fossil Fuelன் பயன்பாடு. Fossil Fuel அதாவது புதைபடிவ எரிபொருள், ஹைட்ரோகார்பன் கொண்ட ஒரு பொருள், பூமியின் மேற்பரப்பில் இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து இயற்கையாக இது உருவாகிறது(நிலக்கரி).

உச்சகட்ட அதிர்ச்சி தரும் விஷயமாக கடந்த 1,20,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த 2023ம் ஆண்டின் ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்க அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமீரகத்தில் செட்டிலாக நினைக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர்.. ஏன்? - அதிகாரப்பூர்வ ஆய்வு சொல்வதென்ன?

click me!