
FBIன் 9ஆவது இயக்குநர் காஷ் படேல்
FBI Director Kash Patel: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் FBIன் 9ஆவது இயக்குநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் அதிகாரப்பூர்மாக நியமிக்கபட்டார். அவர் நியமிக்கப்பட்டு 2 மாதங்களுக்குள்ளாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் தலைமை அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், அதிக நேரம் இரவு விடுதிகளில் இருப்பதாகவும் முன்னாள் உதவி இயக்குநரான ஃபிராங் ஃபிக்லியுஸி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ராபர்ட் முல்லரின் கீழ் FBI இன் எதிர் புலனாய்வுக்கான முன்னாள் உதவி இயக்குநரான ஃபிராங்க் ஃபிக்லியுஸி வெள்ளிக்கிழமை MSNBC உடன் பேசினார். அதில் அவர் படேல் பெரும்பாலும் இரவு விடுதிகளில் தான் இருக்கிறார் என்றார். அவர் ஹூவர கட்டிடத்தின் 7ஆவது மாடியில் இருந்ததை காட்டிலும் இரவு விடுதிகளில் தான் அதிக நேரம் இருந்துள்ளார்.
அதிக நேரம் இரவு விடுதிகளில் இருக்கிறார்:
அவருக்கான நாள்தோறும் விளக்கங்கள் என்பதிலிருந்து வாரத்திற்கு 2 முறை என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது வாரங்களை ஹூவர் கட்டிடத்திற்கும் லாஸ் வேகாஸில் உள்ள தனது வீட்டிற்கும் இடையில் பிரித்து வாஷிங்டன் டிசியிலிருந்து முற்றிலுமாக தனது நேரத்தை இரவு விடுதிக்கு என்று அர்ப்பணித்து வருவதாக ஊடகங்கள் கூறி வருகின்றன.
இதில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது அவருக்கு உண்மையில் எந்த அனுபவமும் இல்லை. அதனால், அவர் எந்தவொரு விஷயங்களை இயக்க முயற்சித்தால் அதனுடைய பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம். மேலும், அதிலிருந்து அவர் முற்றிலுமாக விலகியிருந்தாலும் பின்விளைவுகள் மோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு தலைமையகத்திலிருந்து வரும் ரிப்போர்ட் என்னவென்றால் அங்கு குழப்பம் நீடிக்கிறது என்பது தான். மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில் படேல் FBIன் தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தியது குறித்து செனட் ஜனநாயகக் கட்சியினர் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் படேலின் பயண செலவுகள், எதற்காக பயணம் செய்திருக்கிறார், எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்பது குறித்த விவரங்களை தெளிவுபடுத்தும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.