அண்டை நாட்டுடன் நம் நாடு அமைதியாக இருந்து நாங்க பார்த்ததே இல்லை... பாகிஸ்தான் இளைஞர்கள் ஆவேசம்!

By sathish kFirst Published Feb 28, 2019, 3:40 PM IST
Highlights

அண்டை நாட்டுடன் நம் நாடு அமைதியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அதே போல நாம் சண்டையிட்டுதான் பார்த்தோம் எனவே இந்திய விமானியை விடுவிக்க  முன்னாள் பிரதமர் உறவினர் பாத்திமா பூட்டோ இம்ரான் கான் குடும்பத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அண்டை நாட்டுடன் நம் நாடு அமைதியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அதே போல நாம் சண்டையிட்டுதான் பார்த்தோம் எனவே இந்திய விமானியை விடுவிக்க  முன்னாள் பிரதமர் உறவினர் பாத்திமா பூட்டோ இம்ரான் கான் குடும்பத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அபிநந்தனின் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இதை கண்டித்து பாகிஸ்தானியர்களே குரல் கொடுத்தனர். அவர் போர் கைதியாக இருந்தாலும் பணியில் உள்ள இந்திய விமானி அவரை மரியாதையாக நடத்த வேண்டும். அவர் கொடுத்த பணியை செய்துள்ளார் என குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினரான பாத்திமா பூட்டோ,  விமானி அபிநந்தனை  விடுவிக்குமாறு இம்ரான் கான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து  அமைதி, நல்லிணக்கம், கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்பதே  இளம் பாகிஸ்தானியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் பாத்திமா பூட்டோ, இந்திய விமானியை விடுவிக்குமாறு இம்ரான் கான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அமைதி, நல்லிணக்கம், கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் இந்திய விமானியை விடுவிக்க வேண்டும் என்பதே என் போன்ற இளம் பாகிஸ்தானியர்களின் கோரிக்கையாகும். 

நம் நாட்டின் வாழ்நாள் முழுவதையும் வெறும் போரிலேயே கழித்து விட்டோம். இனி போர் நடந்து அதில் பாகிஸ்தான் வீரர்களோ இந்திய வீரர்களோ மடிவதை யாருமே விரும்பவில்லை. ஆதரவற்றவர்களின் துணை கண்டமாக நாம் இருக்கக் கூடாது. அண்டை நாட்டுடன் நம் நாடு அமைதியாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அதே போல நாம் சண்டையிட்டுதான் பார்த்தோம் எனவே இந்திய விமானியை விடுவிக்க வேண்டும் என்று பாத்திமா பூட்டோ கேட்டுக் கொண்டார். 

click me!