’பாக்., - இந்தியா இடையே போர்..? உண்மையை போட்டுடைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

By Thiraviaraj RM  |  First Published Feb 28, 2019, 1:48 PM IST

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 


இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

வட கொரியா, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியட்நாமில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து ட்ரம்ப் பேசினார். 

Latest Videos

அப்போது, ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிடமிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நற்செய்தி வந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற சூழல் சீக்கிரமே முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் - இந்தியா இடையே சுமூகமான சூழல் விரைவில் நிலவும் எனக் கருதப்படுகிறது.

 

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் அமெரிக்க அரசு தரப்பு, ‘இரு நாட்டுக்கும் இடையில் அடுத்த கட்ட ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தீவிரவாத தக்குதல் என்பது இந்திய துணைக் கண்டத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, நாங்கள் பாகிஸ்தான் அரசை, அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாதத்தை ஒடுக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்' என பாகிஸ்தான் ஏற்கெனவே எச்சரித்து இருந்தது. 

click me!