11 வயது மகனுக்கு 17 மணிநேரம் தூங்காமல் வீடியோ கேம் விளையாடும்படி தந்தை கட்டாயப்படுத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.
டிஜிட்டல் யுகத்தில், எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு டிஜிட்டல் சாதனத்தை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில் சில ஆரோக்கியமான எல்லைகளை வரையறுப்பதும் பெற்றோரின் பொறுப்பாகும். எந்த வயதில், அவர்கள் அதை உபயோகிப்பது பாதுகாப்பானது என்பது விவாத பொருளாக இருக்கிறது. சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 1 மணிக்கு விளையாடி உள்ளான்.
இதனை அவனது தந்தை கண்டுபிடித்த பிறகு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார். அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதால் உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன என்பதை மகனுக்கு புகட்ட தொடர்ந்து கேம் விளையாட சொல்லியுள்ளார். பல மணி நேரத்திற்கு பிறகு மகன் முடியவில்லை என்று கூற, மன்னிப்பு கேட்டும் சிறுவனது தந்தை விடவில்லை.
இதையும் படிங்க..‘காம வெறி’ நாயை கூட விட்டு வைக்காத வெறிபிடித்த சைக்கோ - வைரல் வீடியோ சர்ச்சை
கடைசியாக 17 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் வாந்தி எடுக்க தண்டனையை நிறுத்தினார் தந்தை. இதனை அப்படியே படம்பிடித்து அதை சீன சமூக ஊடக தளமான Douyin - சீனாவின் TikTok பதிப்பில் பகிர்ந்துள்ளார். சிறுவன் தனது கணினியில் வீடியோ கேம்களை தாமதமாக விளையாடியதற்காக மன்னிப்பு கேட்டான். சிறுவன் தனது கடிதத்தில், "எனது அப்பா நான் விளையாடுவதை கண்டுபிடித்தார்.
இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்
பின்னர் என் தந்தை என்னை தண்டித்தார். 17 மணி நேரம் விளையாடினேன். நான் இரவு 11 மணிக்கு முன் படுக்கைக்குச் செல்லுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைபேசியை வைத்து விளையாட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். தந்தை மகனுக்கு தந்த இந்த வினோத தண்டனைபேசுபொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?