Amazon Layoffs: 9000 பேரின் வேலையைப் பறிக்கும் அமேசான்! தொடரும் பணிநீக்க நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி

By SG BalanFirst Published Mar 20, 2023, 9:20 PM IST
Highlights

ஜனவரி 18 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய அமேசான் நிறுவனம் மீண்டும் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களின் வேலையைப் பறிக்க முடிவு செய்துள்ளது.

உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் அமேசான் வெப் சர்வீசஸ், ட்விச் மற்றும் விளம்பர பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள்தான் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் வெகுஜன துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் ஏற்கனவே கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான் மீண்டும் ஆள் குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸ்ஸியின் மெமோவில், நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் நிறைவடைந்ததாகவும், அதுவே கூடுதல் பணநீக்க நடவடிக்கைக்கு வழிவகுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அமேசான் வேறு பிரிவிகளில் புதியவர்களை பணியமர்த்த இருப்பதாவும் அவர் கூறினார்.

அறநிலையத்துறை பள்ளிகளில் இந்து சமய கல்வி கட்டாயம்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பல ஆதார் அட்டைகளில் ஒரே நபரின் படம்! ஆதார் ஆணையத்துக்கு ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்

"சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளின்போது இந்த ஆட்குறைப்பு பற்றி ஏன் அறிவிக்கவில்லை என்று சிலர் கேட்கலாம். அதற்கான சுருக்கமான பதில் என்னவென்றால், மதிப்பீட்டின்போது அனைத்து அணிகளும் சிறப்பாக செயல்படவில்லை என்று தெரிந்தது. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். ஊழியர்கள் உரிய நேரத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிப்போம்” எனவும் ஜெஸ்ஸி கூறியுள்ளார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம் இந்த ஆண்டு 10,000 பேரை விலையில் இருந்து நீக்குவதாக கூறிய சில நாட்களில் அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பெற்றோரின் திட்டுக்கு பயம்... கையை பிளேடால் கீறி போலி பாலியல் புகார் கூறிய சிறுமி!

click me!