முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்தி வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் கைது செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அடுத்த அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் அதிபர் டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட உள்ளார் என நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்கள் மூலம் தெரிவருகிறது" என்று கூறியுள்ளார். இதை எடுத்துப் போராட்டம் நடத்தவும் தன் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில் ட்ரம்ப் தான் கைது செய்யப்பட உள்ளதாகக் கூறி இருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்க்குப் போட்டியாகக் களமிறங்க உள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான விவேக் ராமசாமி டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 700 இந்தியர்களை நாடு கடத்த நோட்டீஸ்; போலி ஆவணங்கள் மூலம் வந்ததாக குற்றச்சாட்டு
A Trump indictment would be a national disaster. It is un-American for the ruling party to use police power to arrest its political rivals. If a Republican prosecutor in 2004 had used a campaign finance technicality to arrest then-candidate John Kerry while Bush & Cheney were in… https://t.co/vRIDRLRuha
— Vivek Ramaswamy (@VivekGRamaswamy)இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான நடவடிக்கைக்காக அதிபர் ஜோ பைடன் அரசை கடுமையாகச் சாடினார். டிரம்ப்பை கைது செய்வது அமெரிக்க வரலாற்றில் ஒரு இருண்ட தருணமாக இருக்கும் என்றும் அமெரிக்கத் தேர்தல் முறையின் மீது மக்களின் நம்பிக்கையை குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஜோ பைடன் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராமசாமி, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தேசிய பேரழிவாக மாறும் என்றும் ஆளும் கட்சி தனது அரசியல் எதிரிகளை கைது செய்ய போலீஸ் அதிகாரத்தைப் பயன்படுத்துவது அமெரிக்கர்களுக்கு எதிரானது என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், பாகுபாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விவேக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார். இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநரான விவேக் ராமசாமி ராமஸ்வாமி கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் தானும் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும்: அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு