வேகமாக பரவும் டெல்டா வைரஸ்... நாடு முழுவதும் வரும் திங்கள் முதல் ஒருவாரம் ஊரடங்கு..!

By Thiraviaraj RM  |  First Published Jun 26, 2021, 5:42 PM IST

அனைத்து உருமாறிய கொரோனாக்களை விடவும் டெல்டா கொரோனா மிக அதிக வேகமாகவும், ஆபத்தாகவும் பரவுவதாக தெரிவித்துள்ளது.


உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது சுமார் 85 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து உருமாறிய கொரோனாக்களை விடவும் டெல்டா கொரோனா மிக அதிக வேகமாகவும், ஆபத்தாகவும் பரவுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபாயகரமான வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்படி, வரும் திங்கள் முதல் அங்கு ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டிருக்கும். மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அவசர தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் மற்றும் எல்லை காவல் படையினர் பயன்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும், இப்போதே டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமை வங்கதேசத்துக்கும் ஏற்படலாம் என அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரோபட் அமின் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மட்டும் இது அமலுக்கு வரவுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் இந்தத் தாக்கம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

click me!