Corona in China: சீனாவில் பரவும் கொரோனாவுக்கு நடிகர், நடிகைகள், பாடகர்கள் பலர் பலி: வெளிவராத புதிய தகவல்கள்

Published : Dec 28, 2022, 11:45 AM IST
Corona in China: சீனாவில் பரவும் கொரோனாவுக்கு நடிகர், நடிகைகள், பாடகர்கள் பலர் பலி: வெளிவராத புதிய தகவல்கள்

சுருக்கம்

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸுக்கு அங்கு புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர் என்று நியூயார்க்கைச் சேர்ந்த என்டிடி சேனல் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸுக்கு அங்கு புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், பாடகர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர் என்று நியூயார்க்கைச் சேர்ந்த என்டிடி சேனல் தெரிவித்துள்ளது.

சீனாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியபின் அங்கு ஒமைக்கான் நோய் தொற்று ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினசரி 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் நோயால்  பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். ஆனால், சீன அரசிடம் இருந்து இதுவரை உண்மை நிலவரம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 

கொரோனா பாதிப்பின் உச்சத்தில் சீனா… வெளியே செல்ல புது டெக்னிக் கண்டுப்பிடித்த தம்பதி… வீடியோ வைரல்!!

இதனால் சீனாவில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலக நாடுகள், உலக சுகாதார அமைப்பு கூட கவலையில் இருக்கின்றன. ஆனாலும், சமூக ஊடகங்கள், மக்கள் வாயிலாக ஏராளமான தகவல்கள் கசிகின்றன.

சீனாவில் பரவிவரும் கொரோனாவில் அந்நாட்டில் பிரபல நடிகர்கள், நடிகைகள் என பலரும் உயிரிழந்துள்ளனர். நடிகர்கள் ஹாங் மு,  சூ லான்லாலன், செங் சிங்காவோ, யு யுஹெங், ஜியாங் யிங்ஹெங், ஹூவா ஹியான் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

இதில் நடிகர் ஹாங் மு(வயது92) சீனாவில் ஏராளமான திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார், இயக்கியுள்ளார். அவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.கடந்த 1930ம் ஆண்டு பிறந்த ஹாங் மு சிறுவயதிலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார், நாடகங்களில் நடத்து பின்னர் திரைத்துறைக்கு வந்தார்.

இனிமே குழந்தை பெத்துக்கமாட்டாராம்!12 மனைவிகள்,102 குழந்தைகள்,568 பேரன்கள் போதுமாம்: உகான்டா விவசாயி

இதேபோல சீனாவில் புகழ்பெற்ற சாங்ராங் எனும் பாடலைப் பாடிய பாடகர் பாவோகுவாங்(87) கொரோனாவில் உயிரிழந்தார். புகழ்பெற்ற நாடக நடிகர், மாவோவுக்கு நெருக்கமாக இருந்த ரென் ஜூன் தனது 103வயதில் கொரோனாவில் உயிரிழந்தார்.

ஹெனன் மாகாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் யாங் லின்(வயது60) கொரோனா தொற்றுக்கு கடந்த 21ம்தேதி பலியானார். திரைப்படஇயக்குநர் வாங் ஜிங்குவாங், பெய்ஜிங் பல்கலைகழகத்தின் பேராசிரியரும், திரைப்பட இயக்குநரான நி ஹென் ஆகியோரும் கொரோனாவில் உயிரிழந்தனர்.

கடந்த 20ம் தேதி நடிகர் பு ஜூசெங்(வயது87), பாடகரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான லீ யான்ஹென் ஆகியோரும் உயிரிழந்தனர்.

சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கி எடுக்க காரணம் என்ன? வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் உண்மையான விவரங்களை சீன அரசு வெளியிட மறுக்கிறது. இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 3.70 கோடி பேர் பாதிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஜப்பான் நிலநடுக்கத்தின் போது வானில் தோன்றிய நீல நிற ஒளி!