சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதற்கும், உயிரிழப்பும், அதிகமான நோய் தொற்றும் இருப்பதற்கும் காரணம் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதற்கும், உயிரிழப்பும், அதிகமான நோய் தொற்றும் இருப்பதற்கும் காரணம் வெளியாகியுள்ளது.
உலகிற்கு கொரோனா எனும் கொடிய வைரஸை தானமாகக் கொடுத்த சீனா, முதல் அலை, 2ம் அலை, 3ம் அலையில் பெரிதாகப் பாதிக்கப்படாமல் தன்னைக் காத்துக்கொண்டது. மக்களுக்கு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும், தடுப்புவிதிகளையும் புகுத்திகடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்குதலில் பெரிதாகப் பாதிக்கப்படாமல் இருந்தது.
undefined
சீனாவின் இந்த கொடூரமான கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது. இதைத் தொடர்ந்து சீனாவில் கொரோனா பரவல் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தினசரி 10 லட்சத்தைஎட்டியுள்ளது, ஆயிரக்கணக்காண மக்கள் உயிரிழக்கிறார்கள்.
வெளிநாட்டு பயணிகள் வருகைக்காக சீனாவில் ஜன 8 முதல் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தல்!
ஆனால், வெளிஉலகிற்கு எந்த விதமான செய்திகளையும் தெரிவிக்காமல் சீன அரசு மவுனம் காக்கிறது. ஆனால், சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு செய்திகளும், கொரோனாவில் மக்கள் படும் அவஸ்தைகளும், காட்சிகளாகவும், செய்திகளாகவும் வந்தவாறு உள்ளன. மயானங்களில் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் இடமில்லாமல் மக்கள் தங்கள் உறவினர் உடலை வைத்து நீண்டநேரம் காத்திருக்கும் காட்சிகளும் வந்துள்ளன.
இந்நிலையில் சீனாவில் பரவிய கொரோனா இந்தியாவிலும் வந்துவிடலாம் என்பதால், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஇப்போதே எடுத்து வருகிறது. மாநிலங்களில் ஆக்சிஜன் கருவிகள், பிளாண்ட்டுகள், வென்டிலேட்டர்களை தயாராக வைத்திருக்கும்படி மத்தியஅரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் உள்ள என்.கே.அரோரோ என்டிடிவி சேனலுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது சீனாவில் கொரோனா வைரஸ் இந்த அளவு வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.
மனித மூளையை தாக்கும் அமீபாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழப்பு: பிரைன் ஈட்டிங் அமீபா?
அவர் கூறியதாவது:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் சென்றதைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை, உலகளவில் பெரும் அபாய ஒலியையும் சீனா எழுப்பியுள்ளது. சீனாவில் உள்ள நிலை குறித்து முழுமையான தகவல் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், நாம் முன்னெச்சரிக்கையுடனும், முன்தயாரிப்புகளுடனும் நடந்து வருகிறோம். சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்தமைக்கு, வைரஸ்களின் கலவைதான் காரணம், அதனால்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவலில் பிஎப்.7 வகை வைரஸ் 15 சதவீதம்தான் காரணம். 50 சதவீத பாதிப்புக்கு பிஎன், பிகியூ(BQ) வகை உருமாற்ற வைரஸ்களும், எஸ்விவி(svv) திரிபு வைரஸ்கள் 10 முதல் 15 சதவீதம் காரணமாகும்.
இந்தியர்களுக்கு தடுப்பூசி மூலமும், கொரோனா பாதிப்பின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிட்டது. முதல் அலையிலிருந்து 3ம் அலைவரை பெரும்பாலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், தடுப்பூசியும் செலுத்தியுள்ளார்கள். ஆதலால் இந்தியர்களுக்கு ஹைபிரிட் இம்யூனிட்டி கிடைத்துள்ளது.
சீனாவைப் பொருத்தவரை மக்களில் பெரும்பாலானோர் வைரஸுக்கு நேரடியாக பாதிக்கப்படவில்லை. அந்நாட்டின் சார்பில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியும் வீரியத்தன்மை குறைந்தது. எனக்குத் தெரிந்து அங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் 4 டோஸ் தடுப்பூசி செலுத்தியும், தற்போது வைரஸ் தொற்றால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 97 சதவீத இந்தியர்கள் 2 டோஸ்கள் செலுத்தியுள்ளனர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியோர் ஒரு டோஸ் செலுத்தியுள்ளனர். 12வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகள் கூட 96 சதவீதம் நோய் தொற்றுக்கு ஆளாகிவிட்டனர்.
தைவானுக்கு மீண்டும் ‘டார்ச்சர்’ கொடுக்கும் சீனா: 43 போர் விமானங்களை அனுப்பி பயிற்சி
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறையில் இருக்கும்போதே பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டனர். அதன் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு, தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
இருப்பினும் சீனாவில் உள்ள நிலையைப் பார்த்து மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முன்தயாரிப்புகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது.
இவ்வாறு அரோரா தெரிவித்தார்