Pakistan Ex PM Imran Khan : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா கான் ஆகியோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா கான் ஆகியோருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அது சட்டத்தை மீறி நடந்த திருமணம் என்று கூறி தீர்ப்பளித்த பாக் நீதிமன்றம், இன்று சனிக்கிழமை அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
ஏற்கனவே பல சிக்கல்களில் உள்ள முன்னாள் பிரதமருக்கு எதிரான மூன்றாவது பாதகமான தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கடந்த வியாழன் அன்று தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பொது சிறையில் உள்ள 71 வயதான இம்ரான் கான், அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக 10 ஆண்டுகளும், சட்டவிரோதமாக அரசு பொருட்களை விற்றதற்காக அவரது மனைவியுடன் இணைத்து 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா கான் தனது முந்தைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இம்ரான் கானை மணந்த பிறகு, இஸ்லாம் கட்டளையிட்ட "இத்தாத்" என்று அழைக்கப்படும் காத்திருப்பு காலத்தை முடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். புஷ்ராவை மணப்பதற்கு முன் இம்ரான் கான் இரு திருமணங்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் இம்ரான் கான், முதல் முறையாக பிரதமராக வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 2018ல் ஒரு ரகசிய விழாவில் பங்கேற்று அவருடைய திருமணத்திற்கான கையொப்பம் இட்டுள்ளார். காத்திருப்பு காலம் முடிவதற்குள் திருமணம் செய்து கொண்டார்களா என்ற சர்ச்சை தான் இப்பொது எழுந்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியின் காரிஸன் நகரில் உள்ள சிறையில் உள்ளார், அவரது மனைவி இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு இடத்தில் தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஹ்லான் மோடி! அபுதாபியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 60,000 இந்தியர்கள் முன்பதிவு!