உலகின் வேகமான பாம்புகள் இவை தான்.. மின்னல் வேகத்தில் இரையை துரத்திக் கொல்லுமாம்..

By Ramya s  |  First Published Feb 3, 2024, 10:04 AM IST

உலகின் வேகமான பாம்பு எது தெரியுமா? ராஜ நாகம் தனது இரையை வேட்டையாட எந்த வேகத்தில் ஓடுகிறது? என்று தெரியுமா.? எனவே இந்த பதிவில் மின்னல் வேகத்தில் இரையைத் தாக்கும் வேகமான பாம்புகள் குறித்து பார்க்கலாம்..


பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆம்.. உலகின் ஆபத்தான உயிரினங்களில் பாம்பும் ஒன்று. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3,500 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில், 25 சதவீதம் மட்டுமே விஷம் கொண்டவை என்று கூறப்படுகிறது. ராஜ நாகம் உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. 

பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக திகழ்கின்றன. பூமியில் உள்ள வேட்டையாடும் உயிரினங்களில் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. ஆனால் வேகமான பாம்பு எது தெரியுமா? ராஜ நாகம் தனது இரையை வேட்டையாட எந்த வேகத்தில் ஓடுகிறது? என்று தெரியுமா.? எனவே இந்த பதிவில் மின்னல் வேகத்தில் இரையைத் தாக்கும் வேகமான பாம்புகள் குறித்து பார்க்கலாம்..

Latest Videos

undefined

மாலத்தீவை மிஞ்சப்போகும் லட்சத்தீவு.. எல்லாமே மாறப்போகுது.. இந்திய அரசு கையில் எடுத்த மாஸ்டர் பிளான்.!!

சைட்விண்டர் ராட்டில்ஸ்னேக் (Sidewinder rattlesnake) :, இரையை அதிவேகமாக துரத்தும் பாம்பாக கருதப்படும் இது மணிக்கு சுமார் 29 கிலோமீட்டர் வேகத்தில் தனது இரையை துரத்தும். தனது தனித்துவமான நகரும் முறையினால், இந்த பாம்பின் வேகமும் மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. சைட்விண்டர்கள் பெரும்பாலும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்கின் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கே அவை செங்குத்தான மேடுகளிலும் கரடுமுரடான மணலிலும் ஓடுகின்றன. மணலில் பதுங்கி இருந்து தனது இரையை வேட்டையாடும் திறன் கொண்டது இந்த பாம்புகள். 

சாரைப் பாம்பு: இந்த பாம்பு வேகமாக இரையை தேடும் வகையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது நாகப்பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்டது இல்லை , ஆனால் இது ஒரு வினாடிக்கு 2.67 மீட்டர் வேகத்தில் பாய்கிறது. இந்த பாம்புக்கு எப்பொழுது பசி எடுத்தாலும் உடனே தன் இரையைக் கொன்றுவிடுமாம்.

பஞ்சுவார்ய் விரியன் பாம்பு: அமெரிக்காவில் பெரும்பாலும் காணப்படும் இந்த பாம்பு வேகமாக பாயும் பாம்புகளில் பாம்பு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது வினாடிக்கு 2.97 மீட்டர் வேகத்தில் பாய்ந்து தனது இரையை அடையும். 6 அடிக்கும் மேலான தூரத்தை ஒரு நொடிக்குள் கடக்க முடியும். தனது இரையை கடித்த உடன் அது இறக்கும் வரை இந்த பாம்பு காத்திருக்குமாம்.. எலிகள் முதல் முயல்கள் வரை பல விலங்குகளை இது இரையாக்கிக்கொள்ளுமாம்..

ராஜ நாகம் : உலகின் மிக நீளமான விஷப் பாம்பு ராஜநாகம் தான். இது தன் இரையை நொடிக்கு 3.33 மீட்டர் வேகத்தில் துரத்துமாம். மிகவும் விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு ஒரு மனிதனை கடித்தால், உடனடியாக சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்த நபர் 30 நிமிடங்களில் இறந்துவிடுவார்.

உலகில் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம்.. ஏன் தெரியுமா?

மஞ்சள் வயிற்று கடல் பாம்பு (Yellow-Bellied Sea Snake) : இது தண்ணீரில் மிக வேகமாக செல்லும் பாம்பு. மஞ்சள் வயிற்று கொண்ட கடல் பாம்புகள் தண்ணீரில் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. தரையின் வேகத்துடன் ஒப்பிடும் போது, அது மணிக்கு 15 கி.மீ. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வாழும் பாம்புகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை.

சதர்ன் பிளாக் ரேசர் (Southern Black Race)r: இது உலகின் அதிவேக விஷமற்ற பாம்பு என்று கூறப்படுகிறது. 12.87 கிலோமீட்டர் வேகத்தில் துரத்துமாம். இந்த பாம்புகள் தங்கள் இரையை பிடிப்பதற்கு பதில் அவற்றை கீழே இழுத்து மூச்சுத் திணற வைத்து கொல்லுமாம்..

click me!