இந்தக் கூட்டம், உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்தியாவின் கண்ணோட்டமான "வசுதைவ குடும்பம்" என்பதை முன்வைத்து நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு புலம்பெயர்ந்த இந்தியர்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் நட்பின் அடையாளமாக இந்தக் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வு பிப்ரவரி 13ஆம் தேதி மாலை அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவுக்கு வெளியே பிரதமர் மோடியின் மிக முக்கியமான கூட்டங்களில் ஒன்றாக இது இருக்க உள்ளது.
இந்தக் கூட்டம், உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்தியாவின் கண்ணோட்டமான "வசுதைவ குடும்பம்" என்பதை முன்வைத்து நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு புலம்பெயர்ந்த இந்தியர்களின் கலாச்சார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய உள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி அறிவிப்பு
is shaping up to be a monumental gathering, a celebration of unity & cultural pride beyond borders.With over 50k already registered,this event promises to be not just a meeting,but a grand festival of Indian spirit, resonating with vibrant heartbeats of India itself. pic.twitter.com/GucN258zCS
— Ahlan Modi (@AhlanModi2024)'அஹ்லான் மோடி' (வணக்கம் மோடி) என்ற பெயருடன் நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆன்லைனின் முன்பதிவு செய்ய https://ahlanmodi.ae/ என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 60,000 க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவுசெய்துள்ளனர்.
அபுதாபி அதிகாரிகளுடன் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய கலைகளின் பன்முகத்தன்மையை காட்சிப்படுத்தும் வகையில், 700 க்கும் மேற்பட்ட கலாச்சார கலைஞர்களின் கண்காட்சி நடைபெற உள்ளது. 150க்கும் மேற்பட்ட இந்திய சமூகக் குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இது உம் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமைக்கு சான்றாக அமையும்
பிரான்சில் UPI பேமெண்ட்! ஈபிள் டவரைப் பார்க்க ரூபாயில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கலாம்!