ஹபுள், ஜேம்ஸ்வெப் ஆகிய தொலைநோக்கிகள் பதிவுசெய்த படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் புதிய படம் படங்கள் ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி (Event Horizon Telescope) மூலம் எடுக்கப்பட்டுள்ளன
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி புதன்கிழமை வெளியிட்ட புதிய படத்தின் மூலம் பால்வெளி அண்டத்தின் மிகப்பெரிய கருந்துளையின் Sagittarius A* என்ற மையப் பகுதியை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக பால்வீதியின் மையத்தில் இருக்கும் பிரம்மாண்டமான கருந்துளை மற்றும் அதன் காந்தப்புல அமைப்பு பற்றித் தெரியவந்துள்ளது.
ஹபுள், ஜேம்ஸ்வெப் ஆகிய தொலைநோக்கிகள் பதிவுசெய்த படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் புதிய படம் படங்கள் ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி (Event Horizon Telescope) மூலம் எடுக்கப்பட்டுள்ளன.
undefined
அனைத்து கருந்துளைகளும் இதேபோன்ற வலுவான காந்தப்புலங்களைக் கொண்டிருக்கலாம் என்று சாத்தியத்தையும் இது உருவாக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளை பூமியில் இருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகள் கருந்துளைகள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட பண்புகளை கொண்டுள்ளனவா என்று அறியவும் முயன்றுள்ளனர்.
புதிய பேமெண்ட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப்! வெளிநாட்டுக்கும் ஈசியா பணம் அனுப்பலாம்!
M87 என்ற இந்த கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி பற்றிய முந்தைய ஆய்வுகள், காந்தப்புலங்கள் கருந்துளைக்குள் பொருட்களைச் செலுத்த பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்துள்ளன. இது Sagittarius A* க்கும் பொருந்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. இது கருந்துளைகள் வாயு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பொருட்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்றும் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"நமது விண்மீன் மண்டலத்தின் இதயத்தில் உள்ள கருந்துளையின் படங்களை முதல் முறையாகப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதன் மூலம் கருந்துளையைச் சுற்றியுள்ள காந்தப்புலங்களைப் பற்றிய பல தகவல்கள் தெரியவருகின்றன" என்று இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியர் ஜிரி யூன்சி சொல்கிறார்.
ஒளி என்பது ஒரு ஊசலாடும் மின்காந்த அலையாகும். இந்தக் கருந்துளைகளைச் சுற்றியுள்ள பிளாஸ்மா காந்தப்புலங்களைச் சுற்றி சுழலும் துகள்களைக் கொண்டது. இது கருந்துளை பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. காந்தப்புலக் கோடுகளை வரைபடமாக்கவும் அனுமதிக்கிறது என்றும் அவர் விளக்குகிறார்.
சூரிய காந்தப்புல மாற்றத்தால் பூமியைத் தாக்கும் வலிமையான புவி காந்தப் புயல்! விளைவு என்ன?