elon musk : errol musk: நல்ல குடும்பம்ப்பா! 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்ற 76வயதான எலான் மஸ்க் தந்தை

By Pothy Raj  |  First Published Jul 15, 2022, 3:28 PM IST

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை எரோல் மஸ்க், தனது 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிவி்த்துள்ளார்.


டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை எரோல் மஸ்க், தனது 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டதாகத் தெரிவி்த்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு வளர்ப்பு மகள் ஜனா பெஜிடென்ஹூட்டுன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டதாகவும், அந்த குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது என தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

எலான் மஸ்க் தன்னுடைய நியுரோலிங் நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை அதிகாரியுடன் உறவு வைத்து,  இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக கடந்த வாரம்,  தெரிவித்திருந்தார். எலான் மஸ்கிற்கு இரட்டை குழந்தை இருப்பது கடந்த வாரம்தான் வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகத் தெரிந்தது. 

இப்போது எலான் மஸ்கிற்கு 3 வயதில் ஒரு தங்கையும், 5 வயதில் ஒரு சகோதரரும் இருப்பதை அவரின் தந்தையே உறுதிசெய்துள்ளார். 

எலான் மஸ்கின் தந்தை எரோல் மக்ஸ் தன்னைவிட 41 வயது குறைந்த வளர்ப்பு மகளுடன் உறவு வைத்து 2 குழந்தைகள் பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். 

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் தி சன் நாளேட்டுக்குப் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய வளர்ப்பு மகள் ஜனா பெஜிடென்ஹூட்டுன் சேர்ந்து நான் கடந்த 2019ம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்டேன். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 3 வயதாகிறது. கடந்த 2017ம் ஆண்டு இதேபோன்று ஆண் குழந்தையும் பெற்றுக்கொண்டேன். அவர் பெயர் எலியாட் ரஷ்.

என்னுடைய வளர்ப்பு மகள் கருவுற்றது திட்டமிட்டு நடந்த நிகழ்வு அல்ல. நாங்கள் சேர்ந்து வாழவும் இல்லை. ஆனால், முதல் குழந்தை பிறந்தபின் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். இருவரும் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருக்கிறோம்

நாம் இந்த பூமியில்இருப்பதற்கான நோக்கமே குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் . அடுத்த குழந்தை தேவையென்றால் பெற்றுக்கொள்வேன். அதற்கான காரணம் தேடமாட்டேன்.” எனத் தெரிவித்தார்

கடந்த 1970களில் மே ஹெய்ட்மென் என்ற பெண்ணே எரோல் மஸ்க் திருமணம் செய்தார். இவருக்கு எலோன் மஸ்க், கிம்பால், டோஸ்கா என 3 குழந்தைகள் பிறந்தனர். அதன்பின் மே மெய்ட்மேனை விவாகரத்து செய்த எரோல் மஸ்க், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹீட் பிஜீடென்ஹூட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருந்தன. அதில் ஒருவர்தான் ஜனா என்பது குறிப்பிடத்தக்கது

எரோல் மஸ்குடன் சேர்ந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் குழந்தையை ஜனா பெற்றெடுத்து, 2019ம் ஆண்டில் 2வது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

எலோன் மஸ்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. இப்போது அவரின் தந்தைக்கு முதல் மனைவி மூலம்  3குழந்தைகளும், வளர்ப்பு மகள் மூலம் 2 குழந்தைகளும் என 5 குழந்தகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க் குடும்பமே பெரும் குழப்பத்தில் இருக்கிறது. 

click me!