bill gates: பணக்காரராக இருக்க பிடிக்கவில்லை! சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு வழங்கும் பில் கேட்ஸ்

By Pothy RajFirst Published Jul 15, 2022, 2:32 PM IST
Highlights

தன்னுடைய அனைத்துச் சொத்துக்களையும் தொண்டு நிறுவன அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாகவும், பணக்காரராக இருக்க பிடிக்கவில்லை என்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அனைத்துச் சொத்துக்களையும் தொண்டு நிறுவன அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாகவும், பணக்காரராக இருக்க பிடிக்கவில்லை என்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5-வதுஇடத்தில் இருக்கும் பில்கேட்ஸ், பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். 

66வயதான அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன அதிபராக பில் கேட்ஸ், கடந்த 1995 முதல் 2017ம் ஆண்டுவரை உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். 102 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் பில்கேட்ஸ் தனது சொத்துக்கள் அனைத்தையும் தொண்டுநிறுவனத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிஏற்றார்

ஏற்கெனவே பில் கேட்ஸ், அவரி்ன்மனைவி மெலிண்டாகேட்ஸ் இருவரும் அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நலப்பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பில்கேட்ஸ் சொத்துக்கள் அனைத்தையும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக பில் கேட்ஸ் பிளாக்ஒன்றில் குறிப்பிட்டதாவது, “ என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தொண்டு நிறுவன அறக்கட்டளைக்கு அளித்துவிட்டு, நானும், எனது குடும்பமும் எதிர்காலத்தில் அங்கு செலவிடப் போகிறோம். என்னுடைய பணத்தை தருவது ஒருபோதும் தியாகம் அல்ல. 

இதுபோன்ற  பெரிய சவால்களைச் சமாளிக்க முனைப்பு காட்டுவது நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வேலையை ரசிக்கிறேன். நான் சமூகத்துக்கு என் வளங்கள் மூலம் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்இதன் மூலம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  

கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்; 7 நாட்களில் புதிய அதிபர்!!

இந்த மாதத்தில் 1000 கோடி டாலர்களை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து செல்ல விரும்புகிறேன். 

கேட்ஸ் அறக்கட்டளை ஆண்டுக்கு 600 கோடிடாலர்  செலவிட்டு வருகிறது, உங்கள் வழிகாட்டல், உறுப்பினர்கள் ஆதரவால் 2026ம் ஆண்டில் 900 கோடி டாலராக செலவிட வேண்டும். எங்கள் நோக்கம் தெளிவானது ஒரேமாதிரியானது. 

நாங்கல் ஏற்கனவே பணிபுரியும் பகுதிகளில் இன்னும் கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம் முன்னேற்றத்தை விரைவுபடுத்தலாம். இந்த செலவினத்தை இந்த மாதம் அறக்கட்டளையின் உதவிக்கு 20 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டக்காரர்களை கண்காணிக்க களத்தில் இறங்கிய ராணுவம்

பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் நடத்தும் அறக்கட்டளை ஏழ்மைக்கு எதிராகவும், நோய் மற்றும் மக்கள் அனைவருக்கும்சமஉரிமை கிடைக்கவும் உழைத்து வருகிறது. 

click me!