உள்ளூர் பல்பொருள் அங்காடியில் ஒரு முழுமையான வட்ட வடிவ முட்டையை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.
பொதுவாக முட்டைகள் ஓவல் வடிவத்தில் இருப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் வட்ட வடிவிலான முட்டையை ஒருவர் வாங்கி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான், ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் முழு வட்ட வடிவ முட்டையை வாங்கி உள்ளார். உள்ளூர் பல்பொருள் அங்காடியில் ஒரு முழுமையான வட்டமான முட்டையை கண்டுபிடித்ததாக அவர் கூறியுள்ளார். முன்னாள் செய்தி வாசிப்பாளரான ஜாக்குலின் ஃபெல்கேட், என்ற நபர் இந்த வட்டமான முட்டையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மெல்போர்னில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் பெண்ட என்ற இடத்தில் உள்ள Woolworths கடையில் இருந்து இந்த தனித்துவமான முட்டையை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Aussie finds 'one-in-a-billion' perfectly ROUND - and she could sell it for thousands of dollars,from Woolworths at Fisherman’s Bend,
They've re-sold for over a thousand before
A-billion-in-one odds to find one yourself pic.twitter.com/K17Q0h9RaX
ஒரு பில்லியனில் ஒரு முட்டை மட்டுமே வட்டவடிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 1.25 பில்லியனில் ஒரு முட்டையை வட்டவடிவில் இருக்கும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதுடன், தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மிக நுட்பமாக செதுக்கப்பட்ட வட்ட வடிவ முட்டையை பார்ப்பது வியப்பாக உள்ளதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் குழந்தைகள் அதை சாப்பிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேலி செய்தனர். இன்னும் சிலரோ இதுபோன்ற அசாதாரண முட்டையை இட்ட கோழிக்கு அனுதாபம் தெரிவித்தனர். தனித்துவமான முட்டையின் மதிப்பு 1,400 ஆஸ்திரேலிய டாலர்கள் (தோராயமாக ரூ. 78,800) என்று கண்டறியப்பட்டது. எனினும் அதன் விலை இதைவிட அதிகமாக இருக்கும் என்று பலர் எதிர்பார்க்கப்படுகிறது.