சிங்கப்பூர்காரர்கள் சாப்பிடும் சர்கரை அளவை கடுப்படுத்த முயற்சி! டாப்பிங்ஸ், பானங்களில் சர்க்கரை அளவுடன் லேபிள்

By Dinesh TG  |  First Published Jul 1, 2023, 1:10 PM IST

புதிதாகத் தயாரிக்கப்படும் பானங்களின் ஊட்டச்சத்து அளவைக் காட்டும் அடையாளக் குறிகளை கொண்ட டேபிள்களை ஒட்ட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
 


பாக்கெட் மற்றும் கண்டெய்னர் பாட்டில்களில் இனிப்பு பானங்களுக்கான அடையாள முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, புதிதாகத் தயாரிக்கப்படும் காப்பி, bubble tea, பழச்சாறு போன்ற இனிப்பு பானங்களுக்கும் இந்த ஊட்டச்சத்து அளவு குறித்த லேபிளை ஒட்ட அரசு வலியுறுத்தியுள்ளது.

உணவுப் பொருட்களில் ஒட்டப்படும் ஊட்சத்து குறித்தவை "A" முதல் "D" வரை அவை வகைப்படுத்தப்படுகின்றன. குளிப் பானங்கள் மற்றும் இனிப்பு பானங்களை விற்கும்போது ஊட்டச்சத்து அளவைக் காட்டும் அடையாளக் குறிகள் கொண்ட லேபிள்களை அதில் இருக்க வேண்டும்.

இனிப்பு பானத்தில் கூடுதலாகச் சேர்க்கப்படும் பொருள்கள் அதாவது 'toppings' போன்றவற்றின் சர்க்கரை அளவைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், பள்ளிகள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் விற்கப்படும் குளிர் பானங்களுக்கும் இனிப்பு பானங்களுக்கும் ஊட்டச்சத்து அளவு குறிப்பிடும் லேபிள் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மூடப்பட இருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம்! இடம்மாறும் மீன் வியாபாரிகள்!

ஊட்டச்சத்து அளவு "D" என்று வகைப்படுத்தப்பட்ட குளிர் அல்லது இனிப்பு பானங்களை விளம்பரம் செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதிமறுத்துள்ளது. சிங்கப்பூர்காரர்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைக்கவே, சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் இது ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

நீரிழிவு நோய் இல்லாத சிங்கப்பூரை உருவாக்க அந்நாட்டு அரசு பல்வேறு புதிய முற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

உயரத்திலிருந்து வீசப்படும் குப்பை! - சாலையில் விழுந்தால் அபராதம்! தண்டனையும் காத்திருக்கு! எங்கு தெரியுமா?

click me!