ஐரோப்பா நாடுகளுக்கு போறீங்களா? இந்த படிவத்தை நிரப்புங்க! சிங்கப்பூர்காரர்களுக்கு புதிய விதிமுறை!

By Dinesh TG  |  First Published Jul 1, 2023, 10:41 AM IST

2024ம் அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் 18 வயது முதல் 70 வயது வரையிலான சிங்கப்பூர்ப் பயணிகள் கூடுதல் பயண ஆவணம் ஒன்றை சமர்பிக்க வேண்டு்ம் என்றும், அதற்காக $10 கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் நாட்டவர்கள், அடுத்த 2024ம் ஆண்டிலிருந்து கூடுதலாக ஒரு பயணப் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியப் பயணத் தகவல், அனுமதியளிப்பு முறை (Etias) என்பது விசா விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மின் விசா விலக்குப் பத்திரமாகும்.

Etias விசா தேவைப்படும் நாடுகள் முதன்மையாக ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாடுகளாகும். மற்றும் Schengen உடன்படிக்கையின் இது பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே சுதந்திரமான பயனத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

பெல்ஜியம், ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட ஷெங்கன் பகுதியில் தற்போது 27 நாடுகள் உள்ளன. மற்ற மூன்று ஷெங்கன் அல்லாத நாடுகளான - பல்கேரியா, சைப்ரஸ் மற்றும் ருமேனியா - எட்டியாஸை விசாவை அனுமதித்து செயல்படுத்தும்.


“ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணர்களின் உத்தேச பாதுகாப்பு அபாயங்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பதாரர்கள்மீது பின்னணிச் சோதனைகளை” Etias மேற்கொள்ளும். இது அமெரிக்கப் பயணிகளுக்கான Esta முறைக்கு நிகரானது இது.

ஐரோப்பியக் கண்டத்தில் எல்லைகளைப் பகிர்வதோடு, ‌ஷென்கன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்குச் செல்ல Etias பத்திரம் தேவை. பெல்ஜியம், ஐஸ்லாந்து, நெதர்லாந்து உட்பட 26 நாடுகள் ‌ஷென்கன் வட்டாரத்தில் உள்ளன. அங்கு இல்லாத பல்கேரியா, சைப்ரஸ், ருமேனியா ஆகிய நாடுகளும் Etias முறையைச் செயல்படுத்தும். இங்கிலாந்துக்கு பொருந்தாது.

சிங்கப்பூரில் மூடப்பட இருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம்!  இடம்மாறும் மீன் வியாபாரிகள்!

சிங்கப்பூர் தவிர, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 58 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் குடிமக்களும் ஆன்லைன் ஆவணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், இது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள், விண்ணப்பம் செய்து 96 மணி நேரத்திற்குள் தகுந்த பதிலளிக்கப்படும். மேலும், பதினெட்டு வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இந்த Etias பத்திரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, பத்து சிங்கப்பூர் வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற வயதினருக்கு Etias தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://etias.com/what-is-etias என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

உயரத்திலிருந்து வீசப்படும் குப்பை! - சாலையில் விழுந்தால் அபராதம்! தண்டனையும் காத்திருக்கு! எங்கு தெரியுமா?

click me!