குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் தூக்கி எறிபவர்களுக்கு அபராதமும், தண்டனையும் விதிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
சிங்கப்பூரில் அதிஉயர்மாடிக் குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அவ்வாறு, நாளை முதல் (ஜூலை 1) வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் விதிகப்பட உள்ளது.
குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு முதலில் உறுதி செய்யவேண்டும்.
குழந்தைகள், வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் குப்பை வீசினால் தேசியச் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு இச்செய்கையை வேறு விதத்தில் கையாளும். அவர்களுக்கு விலக்கும் அளிக்கப்படும்.
சிங்கப்பூரில் மூடப்பட இருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம்! இடம்மாறும் மீன் வியாபாரிகள்!
வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குப்பை இவ்வாறு வீசப்பட்டபோது தாம் வீட்டில் இல்லை என்பதை நிரூபித்தால் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு விதிக்கும் அபராதம் அல்லது தண்டனையை அவர் மறுக்கலாம். குப்பையை வீசியவரின் அடையாளத்தை சுற்றுப்புற அமைப்பிடம் 14 நாள்களுக்குள் தெரிவித்தும் அவர் தனது குற்றச்சாட்டை மறுக்கலாம்.
அவ்வாறு உயரத்திலிருந்து குப்பை வீசுபவர் யார் என்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதல் முறை: $2,000 வரையும், 2வது முறை: $4,000 வரையும், 3வது அல்லது அடுத்தடுத்த முறை: $10,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு, குற்றம் புரிந்தோருக்கு 12 மணி நேரம் வரை பொதுஇடத்தை சுத்தம் செய்யும் பணியும் தண்டனையாக விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Refresh Pod | சிங்கப்பூர் விமானநிலையத்தில் கொளுத்தும் வெயில்! - ஊழியர்கள் இளைப்பாற புது வசதி!