சிங்கப்பூரில் உள்ள சினோக்கோ மீன்பிடி மற்றும் விற்பனைத் துறைமுகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்திற்குள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சினோக்கோ மீன்பிடித் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் மீன் வியாபாரிகள் ஜூரோங் மீன்பிடி துறைமுகத்திற்கு இடம் மாற இருக்கின்றனர்.
சிங்கப்பூரில், சினோக்கோ மற்றும் ஜூரோங் ஆகிய இரு மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் பல்வேறு புதிய வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த புதிய கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கத்தில் துவங்கியது சிங்ப்பூர் அரசு.
ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தில் 110 வர்த்தகத் தளங்களுடன் கூடிய மொத்த வியாபார சந்தைக் கட்டடம் உள்ளது. அதன் அருகில் மற்றொரு கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக 20 வர்த்தகத் தளங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த புதிய வர்த்தக தளங்கள் சினோக்கோவிலிருந்து வரும் மீன் வியாபாரிகளுக்காக கட்டப்படுவதாக சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சினோக்கோ, ஜூரோங் ஆகிய இரு மீன்பிடித் துறைமுகங்களையும் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.
மூடப்படவிருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது சுமார் 25க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறைமுகம் கடந்த 1997-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது, உள்ளூர் மீன்பிடி படகுகளுக்கான தளமாக இது பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் கடைசி சில மீன்பிடிப் படகுகளை மொத்த வியாபாரியான லியான் யாக் மீன் வர்த்தக நிறுவனம் விற்றது. இந்த நிறுவனம் 1955ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1997-ம் ஆண்டில் சினோக்கோவுக்கு இடம் மாறியபோது அந்நிறுவனத்திடம் 10க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில் பொங்கோல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்களும், வியாபாரிகளும் சினோக்கோவுக்கு இடம் மாறினர். அதைதொடர்ந்து, பொங்கோல் பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியாக மாறியது.
Refresh Pod | சிங்கப்பூர் விமானநிலையத்தில் கொளுத்தும் வெயில்! - ஊழியர்கள் இளைப்பாற புது வசதி!
1997ம் ஆண்டில் சுமார் 200 மீன்பிடிப் படகுகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள், சினோக்கோவில் உள்ள 180 மீட்டர் நீளமுள்ள படகுத் துறையில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என பொங்கோல் மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான டேனியல் பே கூறியுள்ளார்.
இதனிடையே, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்கு இடம் மாறினால், ஏற்கெனவே பல ஆண்டுகளாக அங்கு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவோருடன் போட்டி ஏற்படும் என்றும், இதனால் தங்களுடைய (சினோக்கோ மீன் வியாபாரிகள்) வருமானம் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சினோக்கோ மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் அருகில் இருந்த நபரின் காதை கடித்த இந்தியர்.. நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது?
மூடப்படவிருக்கும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம், பின்னர் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்ற தகவல் அரசு தரப்பில் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.