ஒரு கல்லுப்பை காட்டிலும் சிறிய அளவில் இந்த பை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஊசியின் நுனியில் உள்ள ஓட்டையில் கூட இந்த கைப்பை நுழைந்து விடும்.
நியூயார்க் நகரை தலைநகரமாக கொண்டு செயல்படும் "MSCHF" என்ற கலைப் பொருட்களை சேகரிக்கும் நிறுவனமானது தற்போது ஒரு விசித்திரமான பொருளை ஏலத்தில் விட்டுள்ளது. பிரபல கைப்பை தயாரிப்பு நிறுவனமான "லூயி விட்டான்" தயாரித்த "மைக்ரோ ஸ்கோபிக் பேக்" ஒன்றை ஏலத்தில் சுமார் 51 லட்சம் ரூபாய்க்கு அந்த நிறுவனம் விற்றுள்ளது.
அதென்ன "மைக்ரோ ஸ்கோபிக் பேக்", ஒரு கல்லுப்பை காட்டிலும் சிறிய அளவில் இந்த பை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஊசியின் நுனியில் உள்ள ஓட்டையில் கூட இந்த கைப்பை நுழைந்து விடும். இதை பார்க்க வேண்டும் என்றாலே மைக்ரோ ஸ்கோப் கொண்டு தான் பார்க்கவேண்டுமாம்.
இதையும் படியுங்கள் : உயரத்திலிருந்து வீசப்படும் குப்பை! - சாலையில் விழுந்தால் அபராதம்!
இந்த பேக் 0.03 அங்குளத்திற்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது, ஏலத்தில் இந்த பையை வாங்கிவருக்கு, இதை கண்டுகளிக்க வசதியாக ஒரு மைக்ரோஸ்கோப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பையை தயாரித்துள்ள லூயி விட்டான் நிறுவனம், இதை Two-Photon Polymerization என்ற 3d தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளதாம்.
ஆபரணங்கள் பதித்த பைகள், சிறிய ரக பைகள், பெரிய ரக பைகள் என்று பல, விதவிதமான பைகளை இந்த நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்துள்ளது. ஆனால் கண்ணுக்கு கூட தெரியாத இந்த பையை தயாரித்து புதிய சாதனையை இந்த நிறுவனம் படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். 25,000 ரூபாய் துவங்கி பல கோடி மதிப்பிலான பைகளை லூயி விட்டான் நிறுவனம் தயாரித்து விற்று வருகின்றது.
இதையும் படியுங்கள் : ஐரோப்பா நாடுகளுக்கு போறீங்களா? இந்த படிவத்தை நிரப்புங்க!