வருகிறது வடகொரியா மீது புதிய பொருளாதார தடை : ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை வாக்கெடுப்பு!

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 10:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
வருகிறது வடகொரியா மீது புதிய பொருளாதார தடை :  ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை வாக்கெடுப்பு!

சுருக்கம்

அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

வடகொரியா, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது.

ஐ.நா. பாதுகாப்பு சபை கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்வதால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடகொரியா மீது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இனி மாதத்திற்கு இருமுறை சம்பளம்..! பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசின் ஸ்மார்ட் மூவ்..
60 ஆயிரம் விஷ பாம்புகளை வளர்த்து கோடீஸ்வரியான 30 வயது பெண்... இது எங்க?