ரூபாய் நோட்டு விவகாரம்... ​மோடியை பாராட்டிய சீன பத்திரிக்கை!

 
Published : Nov 28, 2016, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
ரூபாய் நோட்டு விவகாரம்... ​மோடியை பாராட்டிய சீன பத்திரிக்கை!

சுருக்கம்

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது ஒரு சிறந்த முன்னுதாரண நடவடிக்கை என சீனா பாராட்டியுள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்‍கும் நடவடிக்‍கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததற்கு நாட்டின் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து சீன அரசின் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸில், "நிதிச் சீர்திருத்த நோக்கில் பந்தயத்தில் இறங்கியுள்ள மோடி" என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், இந்தியப் பிரதமர் மோடி எடுத்திருப்பது, மிகவும் துணிச்சலான நடவடிக்கை என்றும், இத்தகைய நடவடிக்கையை சீனாவில்  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூபாய் நோட்டுச் சீர்திருத்தம், மோடிக்கான பந்தயமாகும் என்றும், வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒரு முன்னுதாரணத்தை  அவர் உருவாக்கியுள்ளார் என்றும் அந்த நாளிதழ் பாராட்டியுள்ளது.  மோடி அரசின் நடவடிக்கை நல்ல நோக்கிலானதே என்றும், ஆனால், அதை அமல்படுத்தும் விதம், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பொருத்தே அந்த முயற்சி வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!