நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்தாக அந்நாட்டின் நில அதிர்வு மைய அதிகாரி ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் ஒரே இரவில் இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 5.9 என்ற அளவில் பதிவாகியுள்ளன.
4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்பட்டி இரவு 11:58 மணிக்கு தாக்கியது. மற்றொரு நிலநடுக்கம் அதிகாலை 1:30 மணி அளவில் உணரப்பட்டது என நேபாளத்தின் சுர்கெட் மாவட்டத்தில் உள்ள நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கங்களின்போது சில பகுதிகளில் கட்டங்கள் குலுங்கிதால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு போலீசார் கூறியுள்ளனர். நிலநடுக்கத்தின் தாக்கம் நேபாளத்துக்கு அருகில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் நர்ஜெஸ் மொஹம்மத் தேர்வு!!
Earthquake of Magnitude:4.9, Occurred on 07-10-2023, 11:30:03 IST, Lat: 29.35 & Long: 81.30, Depth: 10 Km ,Location: Nepal. for more information Download the BhooKamp App https://t.co/x0BuMHUYom pic.twitter.com/Z8XMLkcfxz
— National Center for Seismology (@NCS_Earthquake)இதற்கு முன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதியும் நேபாளத்தில் சுமார் அரைமணி நேரத்திற்குள் இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 4.6 மற்றும் 6.2 என்ற ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சிக்கம் மாநிலத்தில் அண்மையில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அண்டை நாடான நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நேபாளம் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பிராந்தியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்படும் நிலநடுக்ககங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்த்த நிபுணர்கள் மேகவெடிப்பினால் மட்டும் இந்த அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர். இதனிடையே, சிக்கம் மாநிலத்தின் லோனாக் ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 65 சதவீதம் தண்ணீர் வெள்ளத்திற்குப் பிறகு வடிந்துவிட்டது. செப்டம்பர் 28 அன்று 167.4 ஹெக்டேராக இருந்த தெற்கு லொனாக் ஏரியின் பரப்பளவு அக்டோபர் 4ஆம் தேதி 60.3 ஹெக்டேராக வெகுவாகக் குறைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
"ஏரி உடைந்து சுமார் 105 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நீர் வெளியேறியிருப்பதைக் காணமுடிகிறது. இது கீழ்நோக்கிப் பாய்ந்து திடீர் வெள்ளத்தை உருவாக்கியிருக்கலாம்" என்று இஸ்ரோ குறிப்பிடுகிறது.
புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!