வீட்டை விட்டு துரத்திய அம்மா.. நிராதரவாக நின்ற 5 வயது சிறுமி கற்பழித்து கொலை - பதைபதைக்க வைக்கும் கொடூரம்!

By Ansgar R  |  First Published Oct 6, 2023, 4:28 PM IST

America : அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) நகரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி, வீடற்ற நபர்கள் தாங்கும் முகாமில் இருந்தபோது, பெரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த சிறுமி அவரது தாயாரால் வீட்டை விட்டு வெளியேற்றபட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட, மைக்கேல் டபிள்யூ. செர்ரி என்பவர், கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டு, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் வருகின்ற டிசம்பர் மாதம் 21ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, Zoey Felix என்று அந்த 5 வயது சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில், உடலில் காயங்களுடன் அக்டோபர் 2 அன்று ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் நர்ஜெஸ் மொஹம்மத் தேர்வு!!

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, கைதான ஜெர்ரி என்ற அந்த நபர், இறந்த சிறுமியின் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தான், ஜெர்ரி மற்றும் அந்த சிறுமியை அந்த வீட்டில் இருந்து, சிறுமியின் தாய் வெளியேறுமாறு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் என்ன சம்மந்தம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இறந்த அந்த சிறுமையை அந்த தாய் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும், அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று தனக்கு உன்ன உணவு ஏதாவது தருமாறு அவர் கேட்பார் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.  

மேலும் "நான் இங்கே தங்கிக் கொள்ளலாமா?" என்று அடிக்கடி அந்த சிறுமி கேட்டு வந்ததையும் கூறி, அருகில் இருந்தவர்கள் மனம் நொந்து பேசியுள்ளனர். அடிக்கடி அந்த குழந்தை யாரும் துணைக்கு இல்லாமல் பொதுவெளியில் சுற்றித் திரிவதையும் பலர் பார்த்துள்ளனர். அந்த ஐந்து வயது சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய தாய் ஏற்கனவே தன் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் 18 மாதம் சிறை தண்டனை பெற்றவர் என்று கூறப்படுகிறது.

யப்பா இது தலையா இல்ல வேற.. தலையில் ஃப்ரிட்ஜை வைத்து சைக்கிள் ஓட்டும் இளைஞர்.. வீடியோ வைரல்..!!

click me!