Singapore : சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு அந்நாட்டு அரசு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 20 முறை பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இரண்டு கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு மைனர் சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டல் கொடுத்த குற்றச்சாட்டில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இன்று 6 அக்டோபர் 2023 அன்று அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற அந்த நபர், இந்த குற்றங்களை புரிந்தபோது அவருக்கு வயது 18 என்றும், அப்போது அவர் தேசிய சேவையாளராக இருந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. மார்சிலிங்கில் உள்ள 36 வயதான நபரான நூர் அஸ்ரி முகமட் தாஹிலுடன் தான், குற்றவாளி உசைர் அடிக்கடி சுற்றித் திரிந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி, 16 வயது பெண் ஒருவர் தனது சக நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அப்பொழுது அங்கே சென்ற குற்றவாளி முஹம்மது உசைர், அவர்களோடு அமர்ந்து மது குடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரை தனது வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தான் வரவில்லை என்று அந்த 16 வயது பெண் எவ்வளவோ கூறியும், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக குடிபோதையில் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மூன்று நபர்களோடு இணைந்து அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர்
இறுதியாக முஹம்மது உசைர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய, மற்ற இருவரும் அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இது போன்று பல சமயங்களில் இளம் பெண்களை குடிபோதைக்கு அடிமையாக்கி அவர்களோடு உடலுறவு கொண்டுள்ளார் அந்த முஹம்மது உசைர் என்ற நபர்.
அதே போல 2021ம் ஆண்டு ஒரு 14 வயது சிறுமியையும், குடிக்க வைத்து, அவரையும் நாசம் செய்துள்ளார் அந்த நபர். இந்த சூழலில் தான் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடக்க துவங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது அந்த நபருக்கு 16 ஆண்டுகள் சிறை மற்றும் 20 பிரம்படி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.