ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். 5.5 ரிக்டர் முதல் 7.2 வரை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் ஹோன்ஷூ பகுதியில் 13 கி.மீ அழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறினர். தலைநகர் டோக்கியோவிலும், கான்டோ பகுதியிலும் நடுக்கம் உணரப்பட்டதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மத்திய ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்திற்கு மேல் கடல் அலைகள் எழலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அடுத்தடுத்து 21 நிலநடுக்கங்கள்: வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!
BREAKING:
Huge 7.6 magnitude earthquake that struck western and superstore and buildings are collapsing. pic.twitter.com/XTv1HJIbo2
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனால் விரைவாக உயரமான நிலத்திற்கு அல்லது அருகிலுள்ள கட்டிடத்தின் உச்சிக்கு தப்பிச் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத அறிக்கைகள் உடனடியாக கிடைக்கவில்லை. தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதா என சோதித்து வருவதாக Hokuriku Electric Power நிறுவனம் தெரிவித்துள்ளது.. நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ONE MORE SCARY Video of shaking in Japan after 7.4m earthquake pic.twitter.com/cGmpkBMUgK
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643)தட்டுகளை உடைப்பது முதல் மரப்பொருட்களை வீசுவது வரை.. வினோத முறையில் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்..