இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவில் இருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவில் இருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிறுவனம், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது.
சுமார் 60 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட அபேபுரா இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை உள்ள நகரங்களில் ஒன்றாகும். கடந்த பிப்ரவரியில், மற்றொரு லேசான நிலநடுக்கம் இந்த மாகாணத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்த்தின் போது கடலில் இருந்த மிதக்கும் உணவகம் இடிந்து விழுந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா, சுமார் 2.7 கோடி மக்களைக் கொண்ட தீவுக்கூட்டம். பசிபிக் பெருங்கடலால் சூழப்பட்ட "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் இருப்பதால் இங்கு அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன.
நவம்பர் 21 அன்று மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் காயமடைந்தனர்.