இந்திய வம்சாவளி தம்பதி.. அமெரிக்காவில் இளம் மகளுடன் இறந்து கிடந்த மர்மம் - கடன் தொல்லை தான் அதற்கு காரணமா?

By Ansgar R  |  First Published Dec 31, 2023, 10:27 AM IST

Indian Origin Couple : அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார தம்பதியும் அவர்களது இளம் வயது மகளும் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


57 வயது மதிக்கத்தக்க ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா (54), மற்றும் அவர்களது 18 வயது மகள் அரியானா ஆகியோர் கடந்த வியாழக்கிழமை மாலை இறந்து கிடந்ததாக நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) மைக்கேல் மோரிஸ்ஸி தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் வெளியில் எந்த எந்தவித அச்சுறுத்தலும் அந்த குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த கமல் அவர்களின் குடும்பம், அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேலும் எடுநோவா என்ற கல்வி அமைப்பு நிறுவனத்தை அவர்கள் நடத்தி வந்ததும், பின் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நிறுவனம் இப்போது செயலிழந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

பாஸ்டன் பல்கலைக்கழகம், எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ராகேஷ் கமல், கல்வி குறித்த ஆலோசனையில் திறன் பெற்றவராக இருந்துவந்துள்ளார். மற்றும் 2016ல் தனது மனைவியுடன் எட்-டெக் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 

எடுநோவா நிறுவனம் இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக திகழ்ந்து வந்ததாக தி பாஸ்டன் குளோப் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அவர்களுடைய நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டது, இதன் விளைவாக கமல்கள் 19,000 சதுர அடி எஸ்டேட்டை - 11 படுக்கையறைகளைக் கொண்டதாக - 2019 இல் $4 மில்லியனுக்கு வாங்கியதாக மாநில பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 2021ல் கலைக்கப்பட்டது, சந்தோஷமாக இருந்த தம்பதிகளுக்கு அப்போது தான் நிதி நெருக்கடி துவங்கியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக அவர்களது மாளிகை போன்ற வீடு ஜப்தி செய்யப்பட்டது. மற்றும் மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட வில்சன்டேல் அசோசியேட்ஸ் எல்எல்சிக்கு $3 மில்லியனுக்கு விற்கப்பட்டது. எஸ்டேட் விற்கப்பட்டபோது $5.45 மில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டது.

கவிழ்ந்து கிடந்த பெட்ரோல் லாரி.. எரிபொருள் எடுக்க ஓடிய மக்கள்.. திடீரென வெடித்ததால் பரபரப்பு - அதிர்ச்சி Video

வியாழன் அன்று நடந்தது என்ன?

பெரும் நஷ்டத்திற்கு பிறகு வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வரும் அந்த குடும்பத்தினரை காண வந்த ஒருவர், சந்தேகமடைந்து கடந்த வியாழன் மாலை 7.24 மணியளவில் போலீசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த நேரத்தில் கமல் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதிகாரிகள் வந்து வீட்டை சோதித்தபோது அவள் மூவரும் இறந்துகிடப்பது தெரியவந்தது. 

அந்த பகுதி மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்தனர் போலீசார். கடன் நெருக்கடியால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!