கவிழ்ந்து கிடந்த பெட்ரோல் லாரி.. எரிபொருள் எடுக்க ஓடிய மக்கள்.. திடீரென வெடித்ததால் பரபரப்பு - அதிர்ச்சி Video

By Ansgar R  |  First Published Dec 31, 2023, 8:41 AM IST

Petrol Tanker Blast Killed 40 : லிபிரியா நாட்டில் சாலை ஓரத்தில் கவிழ்ந்து கிடந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்றிலிருந்து மக்கள் எரிபொருள் திருடிய பொழுது அது திடீரென வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வியாழன் டிசம்பர் 28ஆம் தேதி, லிபிரியா நாட்டில் உள்ள டோட்டோட்டா (Totota) என்கின்ற நகரத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. டோட்டோட்டா நகரப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெட்ரோல் டேங்கர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விழுந்துள்ளது, பின் அதிலிருந்து பெட்ரோல் கசிய துவங்கியுள்ளது. 

இதை பார்த்த அங்கிருந்த மக்கள் தங்களிடமிருந்த பாத்திரங்களில் அதை எடுத்துச் செல்ல துவங்கியுள்ளனர். ஒரு சிலர் எரிபொருள் எடுப்பதை பார்த்து ஒரு பெரிய அளவிலான மக்கள் கூட்டமே அந்த லாரியின் அருகில் கூடி அங்கு கவிழ்ந்து கிடந்த டேங்கரிலிருந்து எரிபொருளை சேமிக்க துவங்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பெட்ரோலை திருடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த டேங்கர் லாரி வெடித்து சிதறி உள்ளது. 

Latest Videos

undefined

பாகிஸ்தானில் காரில் ஜன்னல் வழியாக இயற்கையை ரசிக்கும் சிங்கம்.. வீடியோ வைரல்!

இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 40ம் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 83 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இந்த காட்சி அருகில் இருந்த ஒருவரால் படமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பலரின் சிதறிய உடல் பாகங்களைக் கொண்டு அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாது நிலையில் பலரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்துள்ளதாக அந்த நகர சுகாதார அதிகாரி சிந்தியா என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார். 

The moment a faulty petrol tanker exploded while people were trying to scoop petrol from it.pic.twitter.com/YNHC2jAAGR

— Akpraise (@AkpraiseMedia)

டோட்டோட்டா என்பது மேற்கு ஆப்பிரிக்காவின் லிபிரியா பகுதியில் உள்ள ஒரு நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதைவிட மோசமான ஒரு ஆண்டாக மாற முடியாது என்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற லிபெரிய நாட்டின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 83 பேர் காயமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!