சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பொதுமக்கள் பீதி..!

Published : Mar 11, 2019, 10:30 AM IST
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பொதுமக்கள் பீதி..!

சுருக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தமான் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. எனினும், இதனால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

முன்னதாக, பிப்ரவரி 28-ம் தேதி அந்தமான் நிகோபார் தீவில் காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8-ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக, பிப்ரவரி 13-ம் தேதி பேம்பூ பிளாட் உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகளில் 4.5-ஆக என பதிவானது. இதேபோல் பசுபிக் பெருங்கடலில், நியூசிலாந்து நாட்டுக்கு வடமேற்குப் பகுதியில் உள்ள ஃபிஜி  தீவுப் பகுதியில் நேற்று மதியம்  6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

பற்றி எரியும் ஈரான்.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்!
டிரம்ப் நோபல் பரிசு 'கனவு' சுக்குநூறானது.. பேரதிர்ச்சி கொடுத்த நோபல் கமிட்டி.. வட போச்சே!