இந்தியாவை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் !! மரங்களை குண்டு வீசி அழித்ததாக வழக்கு பதிவு !!

By Selvanayagam P  |  First Published Mar 9, 2019, 10:23 PM IST

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 350 க்கும் மேற்பட்டே தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வரும் நிலையில், இந்திய விமானமப் படை அத்துமிறீ பாகிஸ்தானுக்கும் நுழைந்து 19 மரங்களை குண்டுவீசி தாக்கி அழித்துவிட்டதாக பாகிஸ்தான் அரசின் வனத்துறை  வழக்கு பதிவு செய்துள்ளது.


கடந்த மாதம் 14-ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் குண்டு வீசி அழித்தனர், இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

Latest Videos

ஆனால், இந்திய விமானப்படையினர் குண்டு வீசியது உண்மைதான், ஆனால், எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை, வனப்பகுதியில் குண்டுவீசிவிட்டு சென்றனர்.

ஆனால் எந்தவிதமான கட்டமைப்பும் சேதமடையவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஆசிப் கபூர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்திய விமானப் படையினர்  மரங்களைத்தான் குண்டு வீசி அழித்துவிட்டதாகப் பாகிஸ்தான் வழக்கு  பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு தொடர்பான அந்த முதல் தகவல் அறிக்கையில், இந்திய விமானப்படையின் விமானங்கள் குண்டு வீசியதில் 19 பைன் மரங்கள் அழிக்கப்பட்டதாகவும், குண்டுவீசிச் சென்ற விமானிகள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறிவரும் நிலையில், நமது நாட்டை அவமானப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அரசின் வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!