நான் இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டீறீங்க..! கடுமையான வரி விதிப்பேன்- இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

Published : Oct 20, 2025, 09:40 AM IST
Narendra Modi (left) and Donald Trump

சுருக்கம்

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக ட்ரம்ப் கூற, இந்திய அரசு அதை மறுத்த நிலையில், இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் 'பெரும் வரிகளை' எதிர்கொள்ளும் என ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

Donald Trump warning to India : ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்தியாவின் அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே 50% வரி விதித்துள்ளார். இந்த முடிவு, உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ட்ரம்பின் அழுத்தத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை குறைந்த விலையில் வாங்கி, அதனை இந்தியா, சந்தையில் விற்று லாபம் ஈட்டுவதாகவும் வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதத்தில், ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25% அடிப்படை வரியை அறிவித்தார், அடுத்த சில நாட்களில் மேலும் கூடுதலாக 25% வரியை விதித்தார். 

இந்தியா மீது 50% வரி விதிப்பு

இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை "அநியாயமானது" என்று விமர்சித்தது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காரணமாக தோல் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் தானியங்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாகத் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் இந்த தகவலை இந்திய அரசு முற்றிலும் மறுத்தது. 

அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என இந்தியா தெரிவித்தது. MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ரஷ்ய எண்ணெய் குறித்து பிரதமர் மோடியுடன் எந்தப் பேச்சும் நடக்கவில்லை, மோடிக்கும் டிரம்புக்கும் இடையே எந்த தொலைபேசி அழைப்போ அல்லது உரையாடலோ நடந்ததாக தங்களுக்குத் தெரியாது என்று கூறியிருந்தது.

கடுமையான வரி விதிக்கப்படும்- டொனால்ட் ட்ரம்ப்

இந்த நிலையில் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா 'பெரும் வரிகளை' எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என இந்தியா மறுத்தது குறித்து கேட்டபோது, டிரம்ப், "அவர்கள் அப்படிச் சொல்ல விரும்பினால், அவர்கள் தொடர்ந்து பெரும் வரிகளைச் செலுத்துவார்கள், அதை அவர்கள் செய்ய விரும்ப மாட்டார்கள்" என்று பதிலளித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்