
இந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையிலொ பேசிய அமெரிக்க அரசியல்வாதி சாண்ட்லர் லாங்கேவின் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். நேற்று புளோரிடா நகர சபை அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக கண்டித்தது. புளோரிடாவின் பாம் பே நகர சபை லாங்கேவின் கருத்துகள் காரணமாக அவரை கவுன்சிலிலிருந்து தடை செய்தது. நகர சபையின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, லாங்கே ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என தணிக்கைத் தீர்மானம் அவர் கருத்து தெரிவிப்பதைத் தடைசெய்துள்ளது. அவரை கவுன்சில் கூட்டத்தில் இருந்தும் நீக்கியுள்ளது.
கவுன்சிலர் சாண்ட்லர் லாங்கே ஒரு பதிவில், அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். "அமெரிக்காவைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு இந்தியர் கூட இல்லை. அவர்கள் நம்மை பொருளாதார ரீதியாக சுரண்டவும், இந்தியாவையும் இந்தியர்களையும் வளப்படுத்தவும் இங்கு வந்துள்ளனர். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது’’ எனத் தெரிவித்து இருந்தார். ஆனாலும், கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, அவர் பின்னர் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, இந்திய-அமெரிக்க சமூகத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்காவில் தற்காலிகமாக விசா வைத்திருப்பவர்களைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், லாங்கே இந்தியர்கள் அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்தப் பதிவு, புளோரிடாவில் தவறான யு-டர்ன் செய்து மூன்று பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர் ஹர்ஜிந்தர் சிங் பற்றியது. அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு பதிவில், லாங்கேவின் அனைத்து இந்தியர்களின் விசாக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகக் அழைப்பு விடுத்தார். "இன்று எனது பிறந்தநாள், டொனால்ட் டிரம்ப் அனைத்து இந்தியர்களின் விசாக்களையும் ரத்து செய்து உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் எழுதினார்.
நகர சபையின் கண்டனமும், தன்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டிக்கத்தக்கது. மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களை ஒடுக்குவது. எனது பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் என்றும் லாங்கேவின் கூறினார்.