
தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, அமெரிக்காவிலும், அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி தீபாவாளி பண்டிகையே கொண்டாடினார்.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் பேஸ்புக் பக்கத்தில் ஒபாமா வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
வெள்ளை மாளிகையில் முதன்முதலாக குத்துவிளக்கை ஏற்றிவைத்து தீபாவளியை கொண்டாடிய முதல் அமெரிக்க அதிபர் என்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.
நானும் எனது மனைவி மிச்சேலும் இந்தியா சென்றிருந்தபோது மும்பையில் குழந்தைகளுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்.
இருளை ஒளி எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தும் குத்துவிளக்கை இந்த ஆண்டு எனது முட்டைவடிவ அலுவலகத்தில் முதன்முறையாக ஏற்றிவைக்கும் கவுரவம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பாரம்பரியத்தை எதிர்கால அதிபர்களும் பின்பற்றுவார்கள் என கருதுகிறேன்.
தீபங்களின் திருநாளான தீபாவளியை அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள், நீங்கள் அனவரும் உங்களது அன்புக்குரியவர்களுடன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எனது ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பில் வாழ்த்துவதாக அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.