
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிண்டனுக்கு ஆதரவாக, புகழ்பெற்ற பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் மியாமி நகரில் கொட்டும் மழையில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
புளோரிடா மாநிலத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ந் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசுக்கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரியும் போட்டியிடுகிறார்கள். இரு வேட்பாளர்களுக்கும் இடையே பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளநிலையில், பல கருத்துக்கணிப்புகளின் முடிவில் ஹிலாரியை முன்னிலை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஹிலாரி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசுப்பணிகளுக்கு தனது சொந்த மின்அஞ்சல்களைப் பயன்படுத்தியது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்கப்போவதில்லை என முன்பு கூறிய அமெரிக்க எப்.பி.ஐ. தற்போது, ஹிலாரியிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களுக்கு இருக்கும் நிலையில், எப்.பி.ஐ.யின் அறிவிப்பு ஹிலாரியின் ஆதரவைச் சரியவைக்கும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே 47 வயதான ஜெனிபர் லோபஸ் ஹிலாரியை ஆதரித்து மியாமி நகரில் இசைநிகழ்ச்சி நடத்தினார். நடிகை, டான்சர், பாடகி என பன்முகத்தன்மை கொண்ட ஜெனிபர் தனக்கே உரிய ஸ்டைலில்மேடையில் ரசிகர்கள் முன் தோன்றி, தனது பிரபலமான ‘லெட்ஸ் கெட் லவுட்’ ‘ஆன் தி புளோர்’ ஆகிய பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த இசை நிகழ்ச்சி நடக்கும் போது மழை வந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் லோபசின் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தனர்.
மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் ஜெனிபர் லோபசின் முன்னாள் கணவர் மார்க் அந்தோணியின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. ஜெனிபரின் இசை நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஹிலாரி மேடைக்கு வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஹிலாரி பேசுகையில், “ நவம்பர் 8-ந்தேதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கையில், அமெரிக்க ஜனநாயகத்தை ஒரு பிரிவினர் கிண்டல் செய்கிறார்கள். இந்த தேர்தலில் இருந்து டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க உங்களால்தான் முடியும். எங்கள் மீது எந்த குற்றச்சாட்டை வீசினாலும், நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. ல்லை. மற்றொருநாள் வாக்களிக்கலாம் என காத்திருக்காதீர்கள். நாம் அனைவரும் வாக்களித்தால் நாம் வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்தார்.