'4.பாக் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன’ – இந்திய ராணுவம் தக்க பதிலடி

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 04:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
'4.பாக் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன’ – இந்திய ராணுவம் தக்க பதிலடி

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் கடந்த மாதம் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2௦ ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தனர்.

தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில், 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் சந்தீப் சிங் ராவத்தை பிடித்து சென்று அவரின்  உடலை துண்டுதுண்டாக வெட்டி சிதைத்துவிட்டு எல்லைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். 
இதற்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்த ராணுவ வீரர்கள்,  நேற்று இரவு ஹெரன் பகுதியில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், பாகிஸ்தான் ராணுவத்தின் 4 முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த ஷாக்.. எங்க ஏர்பேஸ் காலி! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!
எகிறிய ஏற்றுமதி.! எடுபடாத அமெரிக்க வரிகள்.! மீண்டும் நிரூபிக்கப்பட்ட மோடியின் ராஜதந்திரம்.!