‘என்ஜின் கோளாறால் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்’ – சிகாகோவில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 01:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
‘என்ஜின் கோளாறால் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்’ – சிகாகோவில் பரபரப்பு

சுருக்கம்

சிகாகோ விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தாதால் பயணிகள் பெரும் பரபரப்புக்கு ஆளாகினர்.

அமெரிக்கா சிகாகோ விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் 161 பயணிகளுடன் மியாமி நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. 

161 பயணிகளுடன் இந்த விமானம் புறப்படும்போது, தீடிரென இந்த விமானத்தில் புகை வந்துள்ளது. இதை கவனித்த விமானி விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக பயணிகளை வெளியேற்றினர்.

அதற்குள் விமானத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால், உடனே விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு துறையினர் விமானத்தில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர்.

என்ஜின் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பு ஏற்படாமல் அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

திடீரென விமானம் தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் பெரும் பரபரப்புக்கு ஆளாகினர்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த ஷாக்.. எங்க ஏர்பேஸ் காலி! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!
எகிறிய ஏற்றுமதி.! எடுபடாத அமெரிக்க வரிகள்.! மீண்டும் நிரூபிக்கப்பட்ட மோடியின் ராஜதந்திரம்.!