மனிதனின் சுயநலத்தால் 60% உயிரினங்கள் அழிவு : அதிா்ச்சி தகவல்!

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 12:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மனிதனின் சுயநலத்தால் 60% உயிரினங்கள் அழிவு : அதிா்ச்சி தகவல்!

சுருக்கம்

மனித செயல்பாடுகளால் உலகம் முழுவதும் 60% உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிா்ச்சி தகவல் தொிவித்துள்ளனா். 

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்காக மட்டும் இல்லை. அனைத்து உயிரினங்களும் இங்கு வாழ உரிமை உண்டு. ஆனால், வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் மனிதர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இயற்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மனிதனின் இந்த செயல் உலகை 6வது பேரழிவுக்கு வேகமாக அழைத்து செல்கிறது என அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

லிவிங் பிளானட் சமீபத்தில் வெளியிட்டுள்ளன ஆய்வு அறிக்கையில் 2016ம் ஆண்டு கணக்குப்படி உலகம் முழுவதும் வாழும் பறவைகள், பாலூட்டிகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட 60% உயிரினங்கள் அழிந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக உலகமயமாக்கல் பார்க்கப்படுகிறது. மனிதர்கள் விதிகளை மீறி செயல்படுவதால் ஓசோனில் ஓட்டை ஏற்பட்டு புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் ஏற்படாமல் அழிய தொடங்கியுள்ளன. இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?
பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு வருமா? கவலை வேண்டாம், நம்மகிட்ட 'பிளான்-B' இருக்கு - பிரதமர் மோடி