“விண்வெளியிலிருந்து தரையிறங்கிய 3 வீரர்கள்”

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
“விண்வெளியிலிருந்து தரையிறங்கிய 3 வீரர்கள்”

சுருக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட 3 வீரர்கள் கஜகஸ்தான் நாட்டில் பத்திரமாக தரை இறங்கினர்.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளது.

இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவ்வப்போது வீரர்- வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவர்.

அதன்படி, மரபணுக்கள் தொடர்பான மற்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷ்யாவை சேர்ந்த அனடாலி இவானிஷின், அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ், ஜப்பானை சேர்ந்த டக்குயா ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் தங்களது ஆய்வுகளை முடித்து கொண்ட இந்த 3 பேரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானில் உள்ள ஸெகஸ்கான் நகரில் பத்திரமாக தரையிரங்கினர்.

3 வீரர்களும் புறப்பட்ட இந்த விண்கலம் புறப்பட்ட 3 மணி நேரத்தில் தரையிறங்கியது.  

PREV
click me!

Recommended Stories

குறிவைக்கப்படும் இந்துகள்..? இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் பரபரப்பு விளக்கம்
லண்டனில் KFC இனவெறி வழக்கு.. இந்திய ஊழியருக்கு ரூ.81 லட்சம் இழப்பீடு