எதிர்காலத்தில் பரவும் தொற்றுநோய் கோவிட் நோயை விட 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், விஞ்ஞானிகளும் உலகத் தலைவர்களும் மர்மமான மற்றும் மிகவும் அழிவுகரமான அச்சுறுத்தலாக கருதப்படும் நோய் X (Disease X) குறித்து கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இந்த நோய்க்கிருமி எதிர்காலத்தில் உருவாகும் எந்தவொரு புதிய, எதிர்பாராத தொற்று நோய்க்கும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) தனது விழிப்புணர்வு பிரச்சாரங்களில் எபோலா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற மற்ற உயர் முன்னுரிமை நோய்களுடன் நோய் Xஐ பட்டியலிட்டுள்ளது.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குனர்-ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ், சுகாதார அமைப்பின் தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. கடந்த வாரம் உலக பொருளாதார மன்றத்தில் (WEF) டாவோஸ் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய கெப்ரேயஸ், நோய் X இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நாடுகள் ஒரு தொற்றுநோய் உடன்பாட்டை எட்டும் என்று நம்புவதாகக் கூறினார்.
இந்த பழங்கள் ஆரோக்கியத்திற்கு அமுதம்..! ஆனால் இவற்றின் விதைகள் மட்டும் விஷம்..!!
எதிர்காலத்தில் ஒரு தொற்றுநோய் பரவினால் அதை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ நாங்கள் ஏற்கனவே பல முயற்சிகளைத் தொடங்கினோம். நாங்கள் ஒரு தொற்றுநோய் நிதியை நிறுவியுள்ளோம். எனவே, இது அடிப்படையில் தயாராக உள்ளது. மேலும் சில நாடுகள் அதிலிருந்து பயனடைந்துள்ளன. சம பங்கீடு என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. பல உயர் வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்திருந்தன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, தென்னாப்பிரிக்காவில் mRNA தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை நாங்கள் நிறுவினோம். இது உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க உதவும்” என்று தெரிவித்தார்.
மேலும் " நாம் எதிர்கொண்ட அனைத்து அனுபவங்களையும், அனைத்து சவால்களையும் மற்றும் அனைத்து தீர்வுகளையும் ஒன்றிணைத்து ஒரு தீர்மானம் கொண்டு முடியும். எனவே, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்காக, நாம் கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களையும் இந்த தொற்றுநோய் ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.
அதிக உப்பு சாப்பிடுவதால் ஆண்டுதோறும் பலர் இறப்பா..? WHO கூறும் திடுக்கிடும் தகவல் இதோ..
" Disease X” என்றால் என்ன?
அடுத்த தொற்றுநோய் " Disease X” என்ற பெயரிடப்பட்ட ஒரு அனுமான வைரஸால் ஏற்படலாம் என்றும் அது ஏற்கனவே பரவத்தொடங்கி இருக்கலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. நோய் X கோவிட் -19 ஐ விட 20 மடங்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது கடந்த 2022-ம் ஆண்டு "தீவிரமான சர்வதேச தொற்றுநோயை" ஏற்படுத்தக்கூடிய நோய்க்கிருமிகளின் உலக சுகாதார மையத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.