துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவானது. இதை அடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. துருக்கியில் 8,574க்கு மேற்பட்டோரும், சிரியாவில் 2,662க்கும் மேற்பட்டோரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?
துருக்கியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இதுவரை 11,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளிலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து காணும் இடமெல்லாம் கான்கிரீட் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. மேலும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: துருக்கி நிலநடுக்கத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு
இதனிடையே மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 10 ஆயிரதத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.