மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற இந்திய மாணவர் அகில் சாய் மிகவும் துரதிர்ஷடவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் படித்துவந்த இந்திய வம்சாவளி மாணவர் தவறுதலாகப் பாய்ந்த துப்பாக்கி குண்டில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்த 25 வயது மாணவர் மகன்கலி அகில் சாய். மேற்படிப்புக்காக 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்ற அகில் மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவந்தார்.
சம்பவம் நடந்த நாளில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு அகில் சாய் தலையில் பாய்ந்துவிட்டது.
Turkey Syria Earthquakes: நெஞ்சை பதற வைக்கும் துருக்கி, சிரியா நிலநடுக்கக் காட்சிகள்
தலையில் பலமான குண்டுக் காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
தெலுங்கானாவில் வசிக்கும் அகில் சாயின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் மகன் அகில் சாயின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தூதரக மூலம் மாணவர் அகில் சாய் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Turkey Satellite Images: துருக்கி நிலநடுக்கத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு