தாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை 9 நாட்கள் தேடுதல்வேட்டைக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி இவர்கள் குகைக்குள் சென்றனர்
அந்த சிறுவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பிரார்தனைசெய்து வந்தனர். மேலும் சிறுவர்களை மீட்கும் பணியில், தாய்லாந்து பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாடு மீட்புப்குழுவை சேர்ந்தவர்கள் மும்முரமாக செயல்பட்டு வந்தனர்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 8 சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று பயிற்சியாளர் உள்பட 5 சிறுவர்களை மீட்கப்பட்டனர்.
அதிக மழை பெய்ததன் காரணமாக, குகைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு குகைக்குள்ளே சென்று விட்டனர்.பின்னர் சுவாசிக்க சற்று சிரமாகவும், உண்ண உணவும் இல்லாமல் உயிருக்கு போராடி வந்தவர்களை, தன் உயிரை துச்சமாக நினைத்து உள்ளே சென்று போராடி அவர்கள் அனைவரையும் தாய்லாந்து வீரர்கள் போராடி மீட்டு உள்ள சம்பவம் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் மீட்கப்பட்ட சிறுவர்களை அங்குள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்ட பிரார்த்தனைக்கு பலனாக தான் இந்த 13 பேரையும் காப்பாற்ற முடிந்தது என அனைவரும் பெருமூச்சி விட்டுள்ளனர்
இதற்கிடையில் 13 பேரையும் மீட்க சென்ற வீர்களில் ஒருவர் குகையில் சிக்கி மரணம் அடைந்துள்ள சம்பவம் ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது