திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என போற்றினார்கள் முன்னோர்கள். ஆனால் தற்போது திருமணத்திற்கு பெண் தேடுவது, மாப்பிளை தேடுவது என அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் என்கிற காலம் வந்துவிட்டது. இது போன்ற மாற்றங்கள் நவீன கால வளர்சியாகத் தான் பார்க்கப்படுகிறது.
இதனை மிஞ்சும் விதமாக,வியட்நாமில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஒரு செய்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைத்துள்ளது.
மனைவி வாடகைக்கு:
வியட்நாமில் தனியார் நிறுவனம் ஒன்று, மனைவி வாடகைக்கு என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ஒரு சிலர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒருசிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.
விளம்பரம்:
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், 'வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டுமே என குறிப்பிட்டு ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
மனைவியை வாடகைக்கு வாங்குபவர் கவனத்திற்கு என கூறி விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்...
நீங்கள் மனைவியாக தேர்வு செய்யும், பெண்கள் கற்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யும் பெண்கள், 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து சேர்வார்.
டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிக்கப்படாது.
நீங்கள் தேர்வு செய்த பெண் ஒரு வருடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், கற்புடன் உள்ள மற்றொரு பெண் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.